உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா!

ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா!

திருநகர்: திருநகரில் உச்சி கருப்பணசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்று திருவிழா நேற்று நடந்தது. திருநகர் 3வது பஸ் ஸ்டாப் அருகேவுள்ள உச்சி கருப்பணசுவாமி கோயிலில் சுவாமிக்கு உருவச்சிலை கிடையாது. நான்கரை அடி உயரத்தில் இரண்டு அரிவாள்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய வெண்கலம் மற்றும் பித்தளை மணிகள் உள்ளன. இங்கு பெண்கள் வருவதில்லை. ஆண்கள் மட்டும் பூஜைகள் வழிபாடுகள் செய்து வருகின்றனர். இங்கு படைக்கப்படும் பழங்கள், உடைக்கப்படும் தேங்காய்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை இக்கோயில் எல்லைக்குள் சாப்பிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது. இங்கு ஆண்டுதோறும் கனி மாற்று திருவிழா நடக்கிறது. நேற்று திருப்பரங்குன்றத்திலிருந்து ஏராளமான மா, பலா, வாழை பழங்கள் கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !