தொலைந்துபோன பொருள் கிடைக்க...
ADDED :1640 days ago
நகை, பணம் போன்ற பொருட்களை வீ்ட்டில் எங்காவது வைத்து விட்டு தேடி அலைவதுண்டு. இதற்கு காவல் தெய்வமான அரைக்காசு அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
அரைக்காசு அம்மன் படத்தின் முன் வெல்லம், பொரிகடலை கலந்த கலவையை வைத்து, ‘‘அரைக்காசம்மா! பொருளைக் கண்ணில் காட்டம்மா!’’ என்று வேண்டுங்கள்.
பொருள் கிடைத்து விடும். மீண்டும் நன்றி தெரிவிக்கும் விதமாக அரைக்காசம்மனை வழிபட வேண்டும். அம்மன் படம் இல்லாவிட்டால் தலைவாசல் நிலைப்படியை சுத்தம் செய்து, அங்கு வெல்லம், பொரிகடலையை வைத்தும் வழிபடலாம். பிரசாதத்தை முதலில் குழந்தைகளுக்கு கொடுப்பது அவசியம்.