ஊரடங்கு மீறி ராமேஸ்வரத்தில் பரிகார பூஜை : அபதாரம்
ADDED :1691 days ago
ராமேஸ்வரம்: ஊரடங்கு விதி மீறி ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு பரிகார பூஜை செய்த புரோகிதருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் தடுக்க மக்கள் முககவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற அரசு உத்தரவிட்டது. ஆனால் நேற்று வைகாசி அமாவாசைக்கு பரிகார பூஜை செய்ய வெளியூர் பக்தர்கள் சிலர் காரில் ராமேஸ்வரம் வந்தனர். பின் கோயில் தெற்கு ரதவீதியில் உள்ள புரோகிதர் ரவி என்பவரது வீட்டில் ஊரடங்கு விதிமீறி பரிகார பூஜை செய்த போது, ராமேஸ்வரம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், போலீசார் ஆய்வு செய்தனர். பின் புரோகிதருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.