தம்பிக்கலையசுவாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1573 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில், ஓலப்பாளையம் அருகே முருகங்காட்டு வலசு ஸ்ரீ தம்பிக்கலைய சுவாமி கோவிலில் நேற்று காலை வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது.ஊரடங்கு காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று அமாவாசை முன்னிட்டு வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், ஏரிமொண்டிக் கருப்பண்ணசாமி, யானை மேல் அழகிய அம்மன், ஏலையப்பசாமி கருப்பண்ணசாமி உட்பட அனைத்து கோவில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜை ஆரவாரமின்றி நடந்தது. வெள்ளகோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பட்ட பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று அமாவாசை சிறப்பு பூஜை நடை பெறவில்லை எனவும் வழக்கம் போல் பூஜை நடந்ததாக தெரிவித்தனர்.