தேவாரப்பதிகங்களை எப்படி பாராயணம் செய்யலாம்
ADDED :1682 days ago
குளித்து திருநீறு பூசி திருமுறை நுால்களை பூஜிக்கவும். ‘பூழியர்கோன் வெப்பொழித்த’ என்ற பாடலைப்பாடி ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரை வணங்கவும். பின் கணபதி, முருகன் பெயர் வரும் பாசுரங்களாகிய ‘பிடியதன்’, ‘நங்கடம்பனை’ ஆகிய பாடல்களை பாராயணம் செய்யுங்கள். நால்வரின் வரிசைப்படி அவர்கள் பாடிய திருமுறைகளை பாராயணம் செய்யுங்கள். நிறைவாக அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாடி நிறைவு செய்ய வேண்டும்.