ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம்
ADDED :1585 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாயகி வசந்த உற்சவம் நேற்று (12ம் தேதி) தொடங்கியது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் எனப்படும் நீராழி மண்டபம் வந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த வசந்த உற்சவம் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.