உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சாம்பிராணி ஏன் போடவேண்டும்?

வீட்டில் சாம்பிராணி ஏன் போடவேண்டும்?

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்கள் அடங்கியுள்ளது. வீட்டில் சாம்பிராணி போடுவதால்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின்  ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும். சாம்பிராணி தினமும் போட முடியவில்லைஎன்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய்,வெள்ளி போன்ற
மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம்  வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள். வீட்டில்  நிம்மதியின்மை, தூக்கமின்மை,கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சனைகள்,கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் தீர்வாகிறது.

சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம்செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்துநன்மைகளும் சாம்பிராணி போடுவதின்மூலம் கிடைத்து விடும். ஏவல், பில்லி சூனியம்,செய்வினை, நவகிரக  தோஷம், முன்னோர்களின் சாபம், போன்ற அனைத்தும் கஷ்டங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். வீட்டில் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடம், கடை, வியாபாரம்  நடக்கும்இடம், என அனைத்து  இடங்களிலும்சாம்பிராணி போடுவதின் மூலம் தொழில் முன்னேற்றம் அடைந்து லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !