உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி : செஞ்சி அடுத்த அன்னமங்கலம் சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி, கடந்த 25ம் தேதி புதிய சுவாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. 26ம் தேதி காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு சுவாமி சிலைகள் அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 108 விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா குழுத் தலைவர் முன்னாள் எம்.பி., ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேக பூஜைகளை செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் சிவாச்சாரியார் ஈஸ்வர சிவம் தலைமையில் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !