கோயில் பட்டாச்சாரியார்களுக்கு அரிசி பைகள்
ADDED :1617 days ago
அருப்புக்கோட்டை: கொரோனா கால கட்டத்தில் ஊரடங்கு காரணமாக, கோயில்கள் திறக்கப்படாத நிலையில், கோயில்களில் பணி புரியும் பட்டாச்சாரியார்கள் வருமானம் இன்றி உள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீமான் டிரஸ்ட் சார்பாக, அரிசி பைகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கல் அனந்தசயன பெருமாள் கோயில், தோப்பூர் பெருமாள் கோயில், பாலையம்பட்டி வேணுகோபால சாமி கோயில் உட்பட பல கோயில்கள் பட்டாச்சாரியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.