உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தி விநாயகர் கோயிலில் 26ம் தேதி வருஷாபிஷேகம்!

சந்தி விநாயகர் கோயிலில் 26ம் தேதி வருஷாபிஷேகம்!

தென்காசி:தென்காசி சந்தி விநாயகர் கோயிலில் வரும் 26ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது.தென்காசி கூளக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயிலில் 42வது ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு மேல் கும்ப அபிஷேகம் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு முழுக்காப்பு தீபாராதனை நடக்கிறது.முன்னதாக வரும் 25ம் தேதி மாக்காப்பு அலங்காரம், இரவு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !