உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

சென்னை:அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி, ஓட்டலில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்தலாம் என்பது உட்பட பல்வேறு புதிய தளர்வுகளுடன் ஜூலை 12 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 5 காலை 6:00 மணிக்கு நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நேற்று அனைத்து துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 காலை 6:00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !