உடுமலை கோவில்கள் திறப்பு: பக்தர்கள் வழிபாடு
ADDED :1526 days ago
உடுமலை : ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடுமலையில் கோயில்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமூக இடைவெளிவிட்டு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உடுமலை மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துவருகின்றனர்.