உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவக்கம்

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஊரடங்கு தளர்வுக்குப் பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யத் துவங்கினர். அதிகாலை கோயிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்து காலை 6.00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மூலவர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் வெப்பச் சோதனை செய்து கிருமிநாசினி வழங்கபட்டது. முகக் கவசத்துடன் இடைவெளி விட்டு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் அனுமதிக்கப்படவில்லை. சுவாமி தரிசனத்திற்கு பின் பக்தர்கள் தாமாகவே தீபாராதனை தட்டை வணங்கி, திருநீறு பிரசாதம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கோயில் கடைவீதிகளில் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. காலை முதல் தொடர்ந்து பக்தர்கள் வருகை காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !