உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: பக்தர்கள் பரவசம்

கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: பக்தர்கள் பரவசம்

அன்னூர்: அன்னூர் தாலுகாவில், 75 நாட்களுக்கு பிறகு, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.


பூசாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்தனர். கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அன்னூர் தாலுகாவில் உள்ள கோவில்களில் தூய்மை பணி நடந்தது. இன்று ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6:00 முதல் 7:30 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக கரிவரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். அதன்பிறகு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். மன்னீஸ்வரர் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு பூஜைகள் நடந்தன. மன்னீஸ்வரர், அருந்தவச் செல்வி அம்மன் ஆகியோருக்கு வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், மாரியம்மன் கோவில், சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !