அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1598 days ago
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.