உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்
ADDED :1664 days ago
கடிகாரம் ஒன்றை முல்லா வாங்கினார். சுவற்றில் மாட்ட ஆணி இருந்தும் சுத்தியல் அவரிடம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்க பலமுறை சென்றும், அவரால் அவரை சந்திக்க முடியவில்லை.
இப்படியாக ஒருவாரம் சென்றது.
ஒருநாள் முல்லா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது, கடிகாரம் தன்னைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து கோபம் கொண்டார். அதே வேகத்தில் பக்கத்து வீட்டுக்கு சென்றார்.
‘‘உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள். நீ மட்டும்தான் வைத்திருக்கிறாயா... எனக்கு தேவையே இல்லை’’ என கோபமாக பேசினார்.
பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றும் புரியவில்லை. பரிதாபமாக பார்த்தார்.
இப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் குழப்பமாக பேசி பிரச்னையை உண்டாக்குகிறார்கள்.