உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதிய நெத்திபட்டை : ராமேஸ்வரம் கோவில் யானை உற்சாகம்

புதிய நெத்திபட்டை : ராமேஸ்வரம் கோவில் யானை உற்சாகம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி புதிய நெத்திபட்டை அணிந்து உற்சாகத்துடன் வலம் வந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள யானை ராமலட்சுமிக்கு, இக்கோவில் பக்தரான சென்னை சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.எஸ்.பி., ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் செலவில் யானைக்கு நெத்திபட்டை, கழுத்து செயின் வழங்கினார். கேரளா திருச்சூரில் தங்க பாலீஷில் நேர்த்தியாக தயாரித்த நெத்திபட்டையை நேற்று கோவில் பாகன் ராமலட்சுமிக்கு அணிவித்தார். புதிய நேத்திபட்டை அணிந்த ராமலட்சுமி உற்சாகத்தில் கோவில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !