உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா நடத்தப்படுமா

பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா நடத்தப்படுமா

சின்னமனுார் : சின்னமனுாரில் உள்ள பிரசித்திபெற்ற பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இங்குள்ள பூலாநந்தீஸ்வரர்- சிவகாமியம்மன் கோயில் புராதானமானது. கும்பாபிேஷகம் நடந்து 12 ஆண்டுகளை கடந்துவிட்டது. நிறுத்தப்பட்ட தெப்பத்திருவிழா சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆண்டுதோறும் தைப்பூசத்தில் தெப்பத் திருவிழாவை நடத்த ஹிந்துசமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சின்னமனுார் ஹிந்து முன்னணி நகர் துணை தலைவர் பாண்டியன் கூறுகையில், சிவாலயங்களில் தெப்பத்திருவிழா மூன்று சுற்றுகள் நடத்தப்படும். அதன் மூலம் சுவாமியும், அம்பாளும் மனம் குளிர்ந்தால் ஊர் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே ஆண்டு தோறும் தெப்பத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !