உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா
ADDED :1703 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஸ்டான நவராத்திரி விழா கடந்த ஜூலை 10 முதல் 18 வரை நவ நாட்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் திரவியப் பொடிகளால் 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு அலங்காரங்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மகா அபிஷேகம் நடந்தது. மானாமதுரை வேதியரேந்தல் மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் நிர்வாகி சுவாமிஜி, மாதாஜி விழாவில் பங்கேற்றனர். ஹோம கேள்விகள் நடந்தது. சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், மங்கள பட்டர், பேஸ்கார் ஜெயகார்த்திக், கண்ணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.