ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம்
ADDED :1557 days ago
காஞ்சிபுரம்: ஓரிக்கை மகா பெரியவர் சதாப்தி மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மற்றும் வியாச பூஜை இன்று (24ம் தேதி) காலை 10.30மணிக்கு துவங்குகிறது.
இதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதத்திற்காக ஓரிக்கை கிராமத்திற்கு வந்தார். இன்று முதல் செப்., 9 வரை, அங்குள்ள மகா பெரியவர் சதாப்தி மணி மண்டபத்தில் விரதம் மேற்கொள்கிறார். காஞ்சியில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் பாலாற்றின் கரையில் உள்ள இங்கு, 1988ல் மகா பெரியவரும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ளனர். பக்தர்களுக்காக விழா நிகழ்ச்சிகள் https://www.youtube.com/watch?v=JaDICrJIudE என்ற யுடியூப் முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.