திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
ADDED :1714 days ago
செந்துறை: திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத சஷ்டி பூஜை நடந்தது. இதில் முருக பெருமானுக்கு தேன், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதுபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டி பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.