கடலாடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை
ADDED :1901 days ago
கடலாடி: கடலாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை நடந்தது. பெண்கள் நெய் விளக்கேற்றியும் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை கூரியைய்யா செய்திருந்தார்.