புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1527 days ago
ராஜபாளையம், புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டி 206 விளக்கு பூஜை நடந்தது.இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா செய்திருந்தார்.