வடசென்னிமலை கோவிலில் ஆக., 2, 3ல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
ADDED :1524 days ago
ஆத்தூர்: ஆத்துார் வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், ஆக., 2 மற்றும் 3ல், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடி பெருக்கு விழாவில், பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆக., 2ல், ஆடி கிருத்திகை மற்றும் ஆக., 3ல், ஆடிப்பெருக்கு நாளில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.