வடபழனி ஆண்டவர் கோவிலில் வாசலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1627 days ago
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு உத்தரவையடுத்து சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆடிக்கிருத்திகை, நாளை ஆடிப்பெருக்கு, வரும், 8ம் தேதி ஆடி அம்மாவாசை ஆகிய விசேஷ நாட்கள் வருகிறது. இதனால், கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனையடுத்து, இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப் படாததால், கோவில் வாசலில் வழிபாடு நடத்தி சென்றனர்.