மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1522 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1522 days ago
திருப்புவனம், : திருப்புவனத்தில் வரும் ஆக.8 ல் ஆடி அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் வழங்க தடை விதித்து சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வைகை ஆற்று படுகைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள். கொரானோ பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம், மடப்புரம் காளி கோயில் உள்ளிட்டவற்றிற்கு மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 8 ல் ஆடி அமாவாசை என்பதால் அன்றும் பக்தர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் ரத்துசிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடக்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவாமிகளுக்கு கோயில்களில் கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் ஆடியில் ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவிழா என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
1522 days ago
1522 days ago