உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்

ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடி, மாசி திருவிழா கொண்டாடப்படும். ஆடி திருக்கல்யாண விழாவுக்கு நேற்று கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிக்கம்பத்தில் கோயில் குருக்கள் திருவிழா கொடியை ஏற்றி வைத்தனர். பின் சுவாமி அம்மனுக்கு மகா தீபாராதனை நடத்தினர். கோயில் இணை ஆணையர் ப ழனிக்குமார், மேலாளர் சீனிவாசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார் அண்ணாதுரை கமலநாதன் கலைச்செல்வம், ஊழியர்கள் பங்கேற்றனர். நேற்று இவ்விழாவிற்கு பக்தர்கள் அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !