உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

திருப்பூர் : திருப்பூர், வாலிபாளையம், கல்யாண சுப்பரமணியர் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்பலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். புது வண்டிப்பாளையம் பால சுப்பிரமணியன் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வயானையுடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் விழா நடைபெற்றது. அரசு உத்தரவுபடி கோயில் மூடப்பட்டதால்  ஆடிக்கிருத்திகை வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் வெளியில் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !