அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED :1581 days ago
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் நன்செய் நிலம் சரியான எல்லைகளுக்குள் அமைந்திருக்கிறதா, ஆக்கிரமிப்புகள் ஏதும் உள்ளதா என்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பாப்பநாயக்கன்பாளையம் கோவிலில், பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, நன்செய்நிலம் சுங்கத்தை அடுத்த சிவராம் நகருக்கு அருகே அமைந்துள்ளது.சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்நிலம், குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அந்த இடத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா, என்பது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில், அறநிலையத்துறை பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.