உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.

கடலூரில் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பெருமாநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை க.க சாவடி மாகாளி அம்மன், திருப்பூர், திருநீலகண்டபுரம் மேற்கு மாரியம்மன், திருப்புத்தூர் ராஜகாளியம்மன், திருப்பூர், வாலிபாளையம் மாகாளியம்மன் திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !