உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி, பண்ணாரி கோவில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை

பவானி, பண்ணாரி கோவில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை

ஈரோடு: பவானி, பண்ணாரி கோவில்களில், இன்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை, அரசு தொடங்க உத்தரவிட்டது. ஏற்கனவே தமிழில் அர்ச்சனை, பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. ஆனாலும், அதை செம்மைப்படுத்தும் வகையில், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் பெயர் பலகைகளை, கோவிலில் வைக்க உத்தரவிட்டு, அர்ச்சனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி, தமிழில் அர்ச்சனை திட்டம், 47 முக்கிய கோவில்களில் இன்று அமலுக்கு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சத்தி அருகே பண்ணாரியம்மன் கோவிலில், தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !