ஆடி அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :1564 days ago
தர்மபுரி: கொரோனா தொற்றால் ஆடி அமாவாசைக்கு, பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோவில் பணியாளர்கள் மூலம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. நேற்று, மொடக்கோரி சிவசக்தி பீட கோவிலில், சிவன், சக்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோன்று தர்மபுரி கோட்டை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் உடனாகிய கல்யாண காமாட்சி, எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயகர், முத்தம்பட்டி, தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் உட்பட, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.