ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம்
ADDED :1554 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடி திருக்கல்யாண விழா நடந்தது.
திருக்கல்யாண விழா ஆக.,1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.12ம் நாள் விழாவான ஆடி திருக்கல்யாணத்தை யொட்டி நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பூ மேடையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர்.கோயில் குருக்கள் யாக பூஜை செய்து இரவு 8:00 மணிக்கு சுவாமி,அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. பின் சுவாமி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.கோயில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் குமரன் சேதுபதிஉட்பட பலர் பங்கேற்றனர்.