கள்ளக்குறிச்சி துர்க்கையம்மனுக்கு பாலாபிஷேகம்
ADDED :1485 days ago
கள்ளக்குறிச்சி : ஆடிவெள்ளியையொட்டி நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையையொட்டி, ராகுகாலத்தில் 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டி, 1008 லலிதா சகஸ்ர நாம மந்திரங்கள் வாசித்து, அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை நடந்தது. கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.