உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை
ADDED :1519 days ago
மதுரை : மதுரையில் அட்சயபாத்திரம், அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் அனுஷ உற்ஸவத்தையொட்டி எஸ்.எஸ்.காலனியில் காஞ்சி மஹாபெரியவா விக்ரகம், பாதுகைக்கு சிறப்பு அபிேஷகம், புஷ்பாஞ்சலி நடந்தது. கொரோனா ஒழிந்து உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கல்யாணசுந்தர சாஸ்திரிகள் சிறப்பு பூஜை செய்தார். முன்னதாக வறுமையால் வாடுவோர், மனநலம் குன்றியோருக்கு உணவு பொட்டலங்களை லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுனர் தங்கராஜ் வழங்கினார். ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லைபாலு செய்தார்.