சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் வரலட்சுமி விரதம், பிரதோஷ பூஜை
ADDED :1593 days ago
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் நேற்று (20ம் தேதி) வரலட்சுமி விரதம், பிரதோஷ பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மாலை நேர பூஜையில் சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிகங்கள் பாராயணம் செய்தனர். கோமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.