உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலஞ்சி விநாயகர் கோயிலில் ஜூன் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம்

இலஞ்சி விநாயகர் கோயிலில் ஜூன் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம்

குற்றாலம்:இலஞ்சி சித்தி விநாயகர் கோயிலில் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இலஞ்சி தேவிஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோவில் தெரு சித்தி விநாயகர் கோயிலில் திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து 24ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் 22ம் தேதியாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலையில் திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, பிரம்மச்சாரி பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது.பின்னர் நவக்கிரக பூஜை, சுதர்சன பூஜை, சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, ஹோமம், மாலையில் கங்கா பூஜை, தீர்த்த ஸங்கிருஹனம், விக்னேஸ்வர பூஜை, எஜமான வர்ணம், ஆச்சார்யா வர்ணம், வாசனம், மகா சங்கல்பம், மிருத்ஸங்கிருஹணம், பாலிகா பூஜை, ரஷாபந்தனம், கும்ப அலங்கார பூஜை, பிரவேச பலி, இரவு கலாகர்ஷணம், யாக சாலை நிர்மாணம், அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது.

23ம் தேதி காலையில் எந்திர பூஜை ஜெபம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, சிவசூர்ய பூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை, அர்ச்சனை யாக ஹோமம், பூரணாகுதி, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், பிம்ப சுத்தி ரக்ஷõபந்தனம் நடக்கிறது. 24ம் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், 11 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேக கும்ப பூஜை ஜெபம், 21 திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்காரம், அரச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !