வளத்தாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1837 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடை வளர்த்தாருடைய அய்யனார், கருப்பணசுவாமி கோவில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை நடைபெற்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றன. பின்பு யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர், கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றன. விழாவில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.