ராகவேந்திரா சுவாமிக்கு விழா
ADDED :1496 days ago
அவிநாசி: ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின், 350வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ குருக்ருபா சேவா அறக்கட்டளை சார்பில், அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஸ்ரீ ராகவேந்திரருக்கு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. அவிநாசி, திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ குருக்ருபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர் முன்னதாக, மடாலய வளாகத்தில் அரச மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.