மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1495 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1495 days ago
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா கோயிலில் நடைபெற உள்ளது.
தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம், திருவீதி உலா ரத்து செய்யப் பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயிலில் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி ஆக.,1 காலை கொடியேற்றத்துடன் கோயிலில் விழா துவங்குகிறது. தினசரி காலை, இரவு உற்ஸவர் விநாயகர் பிரகார வலம் வருதல் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும், மதியம் முக்கூரணி மோதகம் படையலும், இரவில் ஐம்பெரும் கடவுளர் எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.கொரோனா கட்டுப்பாடுகளால் இரண்டாம் நாள் காலை வெள்ளி கேடகத்தில் புறப்பாடு, இரவில் திருவீதி உலா, 6ம் திருநாளில் நடக்கும் கஜமுக சூரசம்ஹாரம், 9ம் திருநாளில் நடக்கும் தேரோட்ட உற்ஸவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.விழா ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி அ.ராமசாமி, வலையப்பட்டி மு.நாகப்பன் செய்கின்றனர். அரசு வழிகாட்டுதல் படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
1495 days ago
1495 days ago