மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4820 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4820 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4820 days ago
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை (தாமிரசபை) அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று(25ம்தேதி) நடக்கிறது. பஞ்சசபைகளில் தாமிரசபை செப்பறை தலம் மகா விஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், மணப்படை வீடு அரசனுக்கு சிவபெருமான் நடன தரிசனம் அளித்த சிறப்புடையது. நெல்லை பகுதியில் வேறு எங்கும் நடக்காத வகையில் சிதம்பரம் கோயிலை போல செப்பறை கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா 17ம்தேதி துவங்குகியது. திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நடன தீபாராதனை, உட்பிரகார வீதியுலா நடக்கிறது. இன்று தேரோட்டம்: 9ம்திருநாளான இன்று மதியம் 12 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் அழகியகூத்தர் தேருக்கு எழுந்தருளுகிறார். 12.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. கோயிலை சுற்றி தேர் வலம் வருகிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். அன்னதானம் நடக்கிறது. நாளை ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. சுவாமிக்கு காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி வீதியுலா, இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் சுப்புலட்சுமி, மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.
4820 days ago
4820 days ago
4820 days ago