திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1865 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.