முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :1633 days ago
திருவாடானை : திருவாடானை மேலரதவீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். கோயில் முன் பெண்கள்பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் பூ தட்டு ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.