மூலநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1591 days ago
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் மதுரை செல்வ விநாயகர் வித்தியாலய மாணவர்கள் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. ஞானசம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமுறை கோயிலுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். திருவாசக பாராயணம் பாடப்பட்டது. ஏற்பாடுகளை ரவி, பெரியாண்டவர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.