உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உறியடி உற்சவம்

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உறியடி உற்சவம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மூன்று நாட்கள் வேதாத்யன சபை சார்பில் கிருஷ்ண யக்ஞம் நடந்தது.

நேற்று முன்தினம் மதியம் மஹா பூர்ணாகுதி நிறைவடைந்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ணாவதாரத்தில் அருள்பாலித்தார். பின்னர் கோயில் முன்பு கட்டப்பட்ட உறியில் கிருஷ்ணர் வேடம் அணிந்தவர்கள் உறியை அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு கருப்பணசாமி சன்னதியில் சிறப்பு தீபாரதனை நடந்து கோயிலை அடைந்தார். இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். தொடர்ந்து கோயில் முன்பு உறி அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !