உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு

விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு

 காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ல் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கால், பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பொது இடங்களில் வழிபாடு நடத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வியாபாரம் ஆகாததால், சிலை உற்பத்தியாளர்கள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், சதுர்த்திஅன்று, விநாயகர் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடத்துவதற்காக, காஞ்சிபுரம், உத்திரமேரூரில் தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் உள்ள சிறிய விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கோவில் கோபுரங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்ட, சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடிக்கும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !