உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்!
ADDED :1531 days ago
இருபது மாடி கொண்ட குடியிருப்பின் மேலிருந்து நீச்சல் குளத்தை எட்டிப்பார்த்தான் டேனியல். அப்போது குரல் ஒன்று அவனுக்கு கேட்டது. ‘சார்லஸ்! உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான்’ என்பதே அது. இதைக்கேட்டு பதறியவன் கீழே குதித்தான். ‘நம் பெயர் சார்லஸ் இல்லையே... நமக்கு திருமணம் ஆகவில்லையே’ என பதறியபடி துாக்கத்தில் இருந்து எழுந்தான் டேனியல்.
‘நாம் யார்’ என்ற உண்மை இன்று பலருக்கும் தெரிவதில்லை. நீச்சல் குளத்தை நோக்கி விழுவதைப் போலவே நமது வாழ்க்கையும் பதற்றமாக செல்கிறது. ஆரம்பத்திலேயே விழித்து கொண்டால், உலகம் உன் வசமாகும்.