ஆலய உழவாரப்பணி என்பது என்ன?
ADDED :1530 days ago
கோயிலைத் துõய்மைப்படுத்துவதற்கு உழவாரப்பணி என்று பெயர். திருநாவுக்கரசர் கையில் உழவாரம் என்னும் மண்வெட்டி போன்ற கருவி இருக்கும். இதைக் கொண்டு கோயிலைச் சுத்தம் செய்வது அவரது வழக்கம். அந்தக் கருவியின் பெயரால் இந்தப் பெயர் ஏற்பட்டது. நாவுக்கரசரைப் பின்பற்றி பக்தர்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.