கன்னிமார் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு வழிபாடு
ADDED :1873 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே காஞ்சரம்பேட்டை பாரைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மை வேண்டி கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.