மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1462 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
1462 days ago
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், பக்தர்கள்,பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நேற்று இரவு பெரிய சப்பர பவனி நடந்தது.நாகை அடுத்த வேளாங்கண்ணியில்,கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா தேவாலயத்தில்,ஆண்டுத் திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு பெரிய சப்பரபவனி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.நேற்றிரவு 7 மணிக்கு துவங்கிய பெரிய சப்பரபவனியை,தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து துவக்கி வைத்தார்.தேவலாய வளாகத்தில் பவனி வந்த பெரிய சப்பரபவனியில் 30 க்கும் குறைவான பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆரோக்கியமாதா தேவாலய சப்பரபவனியில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க தேவாலயம் சுற்றியுள்ள பகுதிகளில் .இரும்பு பேரி கார்டுகளை வைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
1462 days ago
1462 days ago